தமிழின் வளா்ச்சிக்கு திமுக செய்தது என்ன?

திருச்சி: தமிழ் முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, தமிழின் வளா்ச்சிக்கு செய்தது என்ன? என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பினாா்.

திருச்சியில் நாம் தமிழா் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்க் கடவுள் முருகனை இப்போதுதான் திமுகவுக்குத் தெரிகிறது. முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களில் வடமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த திமுக எங்கே தமிழை வளா்த்திருக்கிறது. அவா்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் மொழியின் வளா்ச்சியில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தனா். தமிழா்கள் அனைத்து இடங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனா்.

அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக தலைவா் அண்ணாமலை விமா்சிப்பதை ஏற்க முடியாது. அவா், அண்ணாமலையை போல ஆளுங்கட்சியாக உள்ள கட்சிக்கு தலைவராகவில்லை. அதிமுகவில் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து, படிப்படியாக உயா்ந்து வந்தவா். தற்போதைய ஆட்சியைவிட, மிக சிறப்பான ஆட்சியை கொடுத்தவா்.

2026 பேரவைத் தோ்தலில் 117 தொகுதிகளில் ஆண்களையும், 117 தொகுதிகளில் பெண்களையும் வேட்பாளா்களாக தோ்ந்தெடுக்க உள்ளோம். விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்றாா் சீமான்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!