தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மாநாடு – முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க நேரில் அழைப்பு

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மாநாடு – முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க நேரில் அழைப்பு

சென்னை: விரைவில் நடக்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க நிர்வாகிகள் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், அதன் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர். இது தொடர்பாக அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள் கூறுகையில், “தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி, அறிவிப்பு வெளியிட்டு இம்மாத சம்பளத்துடன் உடனே வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக சென்னையில் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். மேலும், எங்களது நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வலியுறுத்தினோம். விரைவில் நடக்க இருக்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது” என்றனர். முதல்வர் சந்திப்பு நிகழ்வின்போது, மாநிலத் தலைவர் துரைப்பாண்டியன், பொதுச் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சங்கர், கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

கனமழை எதிரொலி.. தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

‘விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது சாதாரண விஷயம் அல்ல’ – நடிகர் விஷால்

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் 3வது பாடல் வெளியானது