தமிழ்நாடு என்றும் திராவிடக் கோட்டை என்று மக்கள் உணர்த்தியுள்ளார்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

சென்னை,

40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக தி.மு.க. முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை" என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் "தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை" என்று நாற்பதுக்கு நாற்பது தீர்ப்பின் வழியாகத் தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளார்கள்! நன்றி!

40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்பவர்களுக்கு… மெஜாரிட்டி பா.ஜ.க. இருக்கும்போதே நாடாளுமன்றத்துக்குள் முழங்கியவர்கள் மைனாரிட்டி பா.ஜ.க.விடமா அடங்கிப் போவார்கள்! Wait and See…"

இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!