தமிழ்நாட்டிற்கு 2 வந்தே பாரத் ரயில்கள் – தொடக்கி வைத்த பிரதமர் மோடி

தமிழ்நாட்டிற்கு 2 வந்தே பாரத் ரயில்கள் சேவையை தொடக்கி வைத்த பிரதமர் மோடி

தமிழ்நாட்டுக்கான இரு வந்தே பாரத் ரயில்கள் உட்பட 3 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சென்னை – நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில், அதிகாலை 5 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, பகல் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு இரவு 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
“சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக மன்னித்து கொள்ளுங்கள்” – பிரதமர் மோடி

இதே போன்று, மதுரை – பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில், அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு நண்பகல் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 1:30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மதுரை வந்து சேரும்.

சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்
ஆண்களின் உடலில் அதிக அளவு யூரிக் அமிலம் இருந்தால் ஏற்படும் 7 அறிகுறிகள்.!
மேலும் செய்திகள்…

இந்த துவக்க விழாவின் போது வந்தே பாரத் ரயிலில் பயணித்த மாணவ-மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூக்களை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, தென் மாநிலங்களின் விரைவான வளர்ச்சி 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முக்கியமானது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதால்தான் தென் மாநிலங்களில் ரயில் போக்குவரத்தை பலப்படுத்த முடிந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
PM Narendra Modi
,
Vande Bharat

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்