தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி

தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடலூரில் அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் போதையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன. அரசியல் பிரமுகர்கள், பெண்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை.

தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது கவலை அளிக்கிறது. தர்மபுரி தொப்பி வாப்பா பிரியாணி கடைக்குள்ளேயே புகுந்து இளைஞரை கொலை செய்துள்ளனர். மனிதர்களை கசாப்பு கடையில் ஆடுகளை வெட்டுவது போல் வெட்டுவது அதிகரித்துள்ளது.

தமிழக மக்களின் கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது. திமுக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கில் இன்னும் துப்பு துலங்கவில்லை. தமிழகத்தில் காவல்துறையை ஏவல் துறையாக இந்த அரசு வைத்திருக்கிறது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்