தமிழ்நாட்டில் ஜூன் 4-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் ஜூன் 4-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் நாளை முதல் ஜூன் 4-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

மேலும்,உத்தரகாண்ட் , பஞ்சாப் , அரியானா , டெல்லி , உத்தரபிரதேசம் , ஜார்கண்ட் , ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசும் எனவும், பீகாரின் சில பகுதிகளில் இன்று மிக கடுமையான வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!