தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக 2வது இடம் : பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக இரண்டாவது இடம் பிடித்தது : மக்களவையில் பிரதமர் மோடி பெருமிதம்

மோடி

தேசத்தின் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்தார்கள் என்று மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். மோடியின் உரையில், இந்தியாவை, 2047ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக்க 24×7 உழைக்கிறோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்த நாடு முன்னேறாது என்றுதான் நாட்டு மக்கள் நினைத்திருந்தார்கள்.

ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை கொள்கையால்தான் நாட்டு மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க கடுமையாக உழைக்கத்தயார், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம் என்றார்.

விளம்பரம்

மேலும், செயல்படுத்த முடியாத அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு ஊழலை மறைக்க மற்றொரு ஊழல் நடந்துள்ளது. 2014ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிட்டிருந்தனர் என்று மோடி கூறினார்.

முன்னதாக, உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினரின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், மூன்றாவது முறையாக தேசத்தின் மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். நாங்கள் எப்படி திறம்பட பணியற்றினோம் என்று மக்களுக்குத் தெரியும், தேசத்தின் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்துள்ளார்கள். ஏழைகள் நலனுக்காக நங்கள் செயல்பட்டதற்கு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

விளம்பரம்

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாகத் தெரிகிறது. 10 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். மதச்சார்பின்மைக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை ராகுல் காந்தி தூண்டிவிடுகிறார். வாக்கு வங்கி அரசியல் தேசத்தை சீர்குலைத்துவிட்டது. அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்கான வளர்ச்சி என்பதே எங்கள் கொள்கை என்றார் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டில் 2வது இடம்

மேலும் மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக இரண்டாவது இடம் பிடித்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவில் முதல் முறையாக பாஜக உறுப்பினர் வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

விளம்பரம்

எதிர்க்கட்சிகள் அமளி

இதற்கிடையே, பிரதமர் மோடி பேச தொடங்கும்போது, பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் கடும் கூச்சலில் ஈடுபட்டனர். இதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், அவைத் தலைவர் இருக்கைக்கு அருகே சென்று முழக்கம் எழுப்பினர். சிலர், பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதட்டி முழக்கமிட்டனர். மணிப்பூர், மணிப்பூர் என்று முழங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை பேசுமாறு தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
PM Modi

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து