பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் தலைமுடியை வெட்ட வேண்டாம் என்று ஆச்சரியமான ஒரு தீர்ப்பை கேரள உயர் நீதிமன்றம் வழங்கியது.
கொல்லம் முதன்மை அமர்வு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆர்எஸ் ஜோதி (38) என்பவர், திரைப்படத்தில் நடிப்பதால், அந்த கதாபாத்திரத்துக்காக வளர்த்து வரும் நீண்ட முடியை வெட்ட வேண்டாம் என்று சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆர்எஸ் ஜோதி தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் தலைமுடியை ஒட்ட வெட்டிவிடுவது சிறைத் துறை விதியாகும். ஆனால், தனக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், அந்த கதாபாத்திரத்துக்காக நீண்ட தலைமுடியை வளர்த்து வருவதாகவும் எனவே, முடியை வெட்டிவிட்டால், அந்த வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால் தலைமுடியை வெட்ட வேண்டாம் என உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
ரயில் பயணத்தின்போது, கொல்லம் ரயில்நிலைய காவல்துறையினரிடம், ஒரு பெண், ஜோதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு 13 நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது கழுத்து வரை வளர்ந்திருக்கும் தலைமுடியை சிறைத் துறை அதிகாரிகள் வெட்ட முயன்றபோது அதனை அவர் தடுத்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மனு போட்டு, தலைமுடியை வெட்ட வேண்டாம் என்று உத்தரவிடுமாறு கோரினார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஜோதியின் தலைமுடியை வெட்ட வேண்டாம் என்று உத்தரவிட்டனர்.