‘தலையிட வேண்டும்’ – குடியரசுத் தலைவர், பிரதமருக்கு கொல்கத்தா மருத்துவர்கள் கடிதம்!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவர்களின் போராட்டம் அங்கு தொடர்கிறது.

இந்நிலையில் செப். 11 அன்று மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு மாநில அரசு அழைப்பு விடுத்திருந்தது.

கேள்வி கேட்டால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்: அன்னபூர்ணா விவகாரத்தில் ராகுல் கடும் கண்டனம்!

ஆனால் மருத்துவர்கள், 'முதல்வர் மமதா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும், பேச்சுவார்த்தையில் 30 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவுக்கு அனுமதி வேண்டும், பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதையடுத்து, பயிற்சி மருத்துவர்களை மீண்டும் நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மாநில அரசு. ஆனால், பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இதனால் நேற்றும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

மறதி நோய் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படுமா? – நம்பிக்கையும் உண்மையும்!

இதையடுத்து பயிற்சி பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

'இந்த கடினமான காலங்களில் உங்கள் தலையீடு, நம்மைச் சுற்றியுள்ள இருளில் இருந்து வெளியேறுவதற்கான வழியைக் காட்டும், நாங்கள் அச்சமின்றி பணி செய்ய உதவும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து