‘தளபதி 69’ படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோல்?

'தளபதி 69' படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும்.

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் 'தி கோட்'. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

'தளபதி 69' படத்தை அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிகர் பாபி தியோல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இவர் சூர்யாவின் 'கங்குவா' படத்தில் வில்லாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 'அனிமல்' படத்தில் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தை ஈர்த்தார் பாபி தியோல்.

'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் இன்று மாலை 5 மணியளவில் 'தளபதி 69' படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!