தவறு செய்யும் போதெல்லாம் பாகிஸ்தானை முன்னிறுத்தும் பாஜக! ஃபரூக் அப்துல்லா

பாரதிய ஜனதா கட்சியினர் தவறு செய்யும் போதெல்லாம் பாகிஸ்தானை முன் நிறுத்துகிறார்கள் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சிகளின் கூட்டணி குறித்து பாஜக தலைவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில், ஃபரூக் அப்துல்லா பதிலளித்துள்ளார்.

“பாஜகவினர் தவறு செய்யும் போதெல்லான் பாகிஸ்தானை முன் நிறுத்துகிறார்கள். அவர்களே தவறு செய்துவிட்டு எங்களை பாகிஸ்தானியர்கள் என்று விமர்சிக்கிறார்கள். ராகுல் காந்தி மற்றும் ஃபரூக் அப்துல்லாவின் கூட்டணிக்கு பாகிஸ்தான் ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர்.

எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. பாகிஸ்தானியர்கள் என்று கூறி, எங்களை ஆபத்தானவர்களாக சித்தரிக்கிறார்கள். சட்டப்பிரிவு 370 தான் பயங்கரவாதத்துக்கு காரணம் என்றார்கள். இன்று அவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள். பயங்கரவாதம் ஒழிந்ததா?

இதையும் படிக்க | அமெரிக்கா புறப்பட்டார் மோடி!

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினர் கொண்ட மாநிலம் என்பதால், ஜம்மு – காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள்” எனத் தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீரில் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அதிகாரத்தை பிறப்புரிமையாக கருதும் மூன்று குடும்பங்கள்! ஸ்ரீநகரில் மோடி

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்