தவெக கொடியை ஏற்றினார் விஜய்

தவெக மாநாட்டில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார்.

மாநாட்டு மேடையில் இருந்து ரேம்பில் நடந்து வந்து கட்சிக் கொடியை ரிமோட் மூலம் விஜய் ஏற்றினார். தமிழக வெற்றிக் கழக கொடியை ஏற்றி வைத்தவுடன் கட்சியின் கொடி பாடல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் மாநாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்தினை தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சரியாக 4 மணியளவில் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார்.

ஆரவாரத்துக்கு மத்தியில் தொண்டர்களை நோக்கி இருகரம் கூப்பி விஜய் வணக்கம் செலுத்தினார். மாநாட்டில் தொண்டர்கள் அளித்த கட்சித் துண்டை அதன் தலைவர் விஜய் அணிந்து கொண்டார். தொண்டர்களின் ஆரவாரத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விஜய் காணப்பட்டார். தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட மற்றும் மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கட்சி பாடலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடலுக்கு பின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. மேடையில் பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கலைநிகழ்ச்சிகளை தொண்டர்கள் உற்சாகத்துடன் கேட்டு ஆரவாரம் செய்து நடனமாடி வருகின்றனர்.

தவெக கொடியை ஏற்றினார் விஜய்

மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விக்கிரவாண்டி சாலையில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்துடன் மாநாடு நடைபெற்று வருகிறது. அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை வாழ்த்தி தொண்டர்கள் உற்சாக முழுக்கம் எழுப்பினர்.

விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். மாநாட்டில் 18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களின் கூட்டம் அதிகளவில் உள்ளனர். அதேசமயம் பெண்கள் மற்றும் முதியவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி