தவெக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா?

தொடர் கனமழையால் தவெக மாநாடு நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக இருப்பதால் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று கேள்வி எழும்பியுள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக். 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

மாநாட்டுப் பணிகள், கடந்த 4-ஆம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிலையில், பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநாடு தொடா்பாக 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா? இனி இதுதான் நடைமுறை!

இந்நிலையில், தவெக மாநில மாநாடு நடைபெறும் இடத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது.

தொடர்ந்து அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மேலும் தண்ணீர் தேங்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வருகிற 27 ஆம் தேதி மாநாடு நடைபெறுமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

தவெக மாநாடு தேதி ஏற்கனவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது