தாஜ்மஹால் மேற்கூரையில் நீர் கசிவு!

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தாஜ்மஹாலின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

ஆக்ராவில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

கனமழையால் தாஜ்மஹாலின் வளாகத்தில் உள்ள தோட்டம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. இதுதொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் மேற்கூரைப் (அரைக்கோள வடிவத்திலுள்ள கூரை) பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

| The symbol of love, Taj Mahal, is flooded. The garden situated in the premises of this beautiful building is submerged. It has been raining continuously for the last 24 hours in Agra. Efforts are on to drain out the water.
#Agra | #UttarPradesh | #india#tajmahal… https://t.co/V3YoVyg79ypic.twitter.com/iMTMWxdPv6

— Weather monitor (@Weathermonitors) September 12, 2024

தாஜ் மஹாலில் ஏற்பட்ட கசிவு குறித்து ஆக்ரா வட்டத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல் கூறுகையில், “தாஜ் மஹாலின் பிரதான மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதை நாங்கள் கண்டோம். எனவே, டிரோன் கேமரா வைத்து மேற்கூரையை சோதனை செய்தோம். ஆனால், கசிவினால் எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாகப் பேசிய உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மோனிகா சர்மா, “தாஜ் மஹால் இந்தியாவின் பெருமை மிகுந்த நினைவுச் சின்னம். இதனை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். மேலும், சுற்றுலாத் துறையில் பணிபுரியும் 100 – க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் தாஜ் மஹால் மூலம் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளோம். எங்களுடைய ஒரே நம்பிக்கை இதுதான்” என்று பேசினார்.

அனுமன் கோயிலில் கேஜரிவால் வழிபாடு!

ஆக்ராவில், மழைநீர் தேங்கியதால் தேசிய நெடுஞ்சாலை ஒன்று மூடப்பட்டு, வயல்களில் பயிர்கள் மூழ்கி பலருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. கனமழை காரணமாக ஆக்ராவில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து