தாம்பத்திய உறவுக்கு மனைவி மறுக்கலாமா? – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

தாம்பத்திய உறவுக்கு மனைவி மறுப்பு சொல்வது உளவியல் கொடுமை – ம.பி நீதிமன்றம் பரபரப்பு கருத்து

தம்பதி

கணவன் உடனான தாம்பத்திய உறவுக்கு மனைவி மறுப்பு சொல்வது இந்து திருமண சட்டத்தின்படி உளவியல் கொடுமை என்று மத்திய பிரதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணமான தம்பதிக்கு தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கணவன் உடனான தாம்பத்திய உறவுக்கு மணைவி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் ஆன 3 நாட்களிலேயே அந்த பெண்ணின் சகோதரர், அவரை தேர்வு எழுதுவதற்காக அழைத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்வுக்கு சென்ற அந்த பெண், மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். அதுமட்டுமன்றி கணவர் குடும்பத்தின் மீது வரதட்சணை புகாரும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட முடிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

ஆனால் மீண்டும் அந்த பெண், தனது கணவர் தன்னை அடித்து கொடுமைப் படுத்தியதாக குடும்பலநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 -ல் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. ஆனால் விவாகரத்தை எதிர்த்து அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : காவிரியில் தண்ணீர் விடுவது நான் தான், என் பேர சொல்ல மறந்துட்டியே!! – அமைச்சர் துரைமுருகன்

இந்த வழக்கை விசாரித்த மத்திய பிரதேச நீதிமன்றம், நீண்ட காலமாக கணவருடன் உடலுறவுக்கு மறுத்து வருவது உளவியல் ரீதியாக கொடுமை செய்வதற்கு சமமாகும். எனவே இதனை அடிப்படையாக கொண்டு கணவனுக்கு விவாகரத்து வழங்கலாம் என்று கூறியுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Court
,
Court Case
,
Husband Wife
,
Sex
,
Sexual life

Related posts

23-ம் தேதி இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு

ஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்

கோர்ட்டில் நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி…பரபரப்பு சம்பவம்