தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பக்ரீத் பண்டிகையையொட்டி தாம்பரம் – நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது. மறுமாா்க்கமாக நாகர்கோவில் இருந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை மறுநாள் தாம்பரம் வந்தடைகிறது.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும்(16ம் தேதி) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமாா்க்கமாக நாகர்கோவிலிருந்து 17ஆம் தேதி புறப்பட்டு திங்கட்கிழமை(18ம் தேதி) தாம்பரத்தையும் சிறப்பு ரெயில் வந்தடைகிறது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!