தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகா்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும், மறுவழித்தடத்தில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறையையொட்டி இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரை – வேளச்சேரி ரயில் போக்குவரத்து! அக்டோபர் முதல் மீண்டும்!
நாகர்கோவிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06012), மறுநாள் காலை திங்கள்கிழமை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் செப்டம்பர் 1, 8, 15, 22, 29, அக்டோபர் 6,13,20,27, நவம்பர் 3,10,17,24 ஆகிய நாள்களில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறுவழித்தடத்தில் தாம்பரத்தில் இருந்து திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06011) மறுநாள் காலை 3.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் செப்டம்பர் 2, 9, 16, 23, 30, அக்டோபர் 7,14,21,28, நவம்பர் 4,11,18,25 ஆகிய நாள்களில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.