தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

வாரத்தில் 2 நாள் மட்டும் செல்லக்கூடிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

பயணிகளின் வசதிக்காவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம்- ராமநாதபுரம் இடையே வாரத்தில் 2 நாள் மட்டும் செல்லக்கூடிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரத்தில் இருந்து வரும் 21, 23, 28, 30 மற்றும் ஜூலை 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 06051) மறுநாள் காலை 7.50 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ராமநாதபுரத்தில் இருந்து வரும் 22, 24, 29 மற்றும் ஜூலை 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை, திங்கட்கிழமை) மதியம் 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06052) மறுநாள் காலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!