திடீர் பள்ளத்தில் புதைந்த டேங்கர் லாரி! புணேவில் பரபரப்பு

புணே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரி வெள்ளிக்கிழமை புதைந்தது.

மகாராஷ்டிர மாநிலம், புணே மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரி சென்றுள்ளது.

அப்போது, எதிர்பாராத விதமாக சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரி, பின்புறமாக தலைகீழாக சாலைக்குள் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | பேஜர்கள் வெடிப்பில் கேரள தொழிலதிபருக்கு தொடர்பா?

உடனடியாக லாரியில் இருந்து ஓட்டுநர் வெளியேறியதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரியை மீட்டனர்.

Water Tanker Swallowed By Road Within Seconds In #Pune#Maharshtra#Video and details here… https://t.co/DKKGtmEluOpic.twitter.com/SE1ziRlbko

— Hyderabad Post (@TheHydPost) September 20, 2024

அதிகாரிகள் ஆய்வு

புணே மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று திடீர் பள்ளத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை