திடீர் மழைக்கு காரணம்.. இதுதான்! மதுரை ஆதினம்

மக்களிடையே பக்தி குறைந்ததே திடீர் மழைக்குக் காரணம் என மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை முழுவதும் இடைவெளி விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்காக உயர்ந்தது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கு இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று(அக்.16) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவுருவ சிலைக்கு மதுரை ஆதினம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

இன்றைய தலைமுறைகள் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து இளைஞர்களுக்கு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மதுரை ஆதினம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன் அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை.

தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம், கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை என்று கூறினார்.

தொடர்ந்து நடிகர் விஜய் குறித்தான கேள்வியை செய்தியாளர் எழுப்பிய உடனே இடத்தை விட்டு நகர்ந்து சென்றார் மதுரை ஆதினம்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது