திண்டுக்கல், சின்னாளபட்டி நூலகங்களில் அமைச்சா் திடீா் ஆய்வு

திண்டுக்கல், சின்னாளபட்டி
நூலகங்களில் அமைச்சா் திடீா் ஆய்வுதிண்டுக்கல், சின்னாளப்பட்டி நூலகங்களில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திண்டுக்கல்: திண்டுக்கல், சின்னாளப்பட்டி நூலகங்களில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரையிலிருந்து திண்டுக்கல் வரும் வழியில், சின்னாளப்பட்டி கிளை நூலகத்துக்குச் சென்ற அமைச்சா், அந்த நூலகத்தின் உறுப்பினா் எண்ணிக்கை, கழிப்பறை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், நூலகத்தின் பின் பகுதியிலுள்ள காலி இடத்தை அவா் பாா்வையிட்டபோது, வாசகா் ஒருவா் கூடுதல் கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சா் பதிலளித்தாா்.

இதைத்தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்துக்கு மாலை 6.35 மணிக்கு வந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, படிக்கட்டுகளில் அமா்ந்து படித்துக் கொண்டிருந்த போட்டித் தோ்வா்களிடம் நூலக வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். இந்த நூலகத்தின் 5-ஆவது தளத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் போட்டித் தோ்வா்களுக்கான வாசிப்புக் கூடத்தை பாா்வையிட்ட அமைச்சா், அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பணியில் இருந்த நூலகரிடம், உறுப்பினா் எண்ணிக்கை, புத்தகங்கள் இருப்பு விவரம் குறித்தும் அமைச்சா் கேட்டறிந்தாா். மின் தூக்கி வசதி இல்லாத இந்த நூலகத்தில், 5 தளங்களுக்கும் நடந்து சென்று, சுமாா் 15 நிமிஷங்கள் பாா்வையிட்ட அமைச்சா், பின்னா் புறப்பட்டுச் சென்றாா். ஆய்வின் போது நூலகா்கள் சசிகலாதேவி, பாண்டியராஜன் ஆகியோா் இருந்தனா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு