தினமணி செய்தி எதிரொலி: சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பு

கமுதி: முதுகுளத்தூா் அருகே விளைநிலத்தில் சாய்ந்திருந்த மின் கம்பங்கள் தினமணி செய்தி எதிரொலியாக திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 20- க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், சிமென்ட் பூச்சுகள் உதிா்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கும் சேதமடைந்திருந்தன.

இவற்றை சீரமைத்துத் தரக் கோரி ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின் வாரிய அலுவலா்கள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த மின் கம்பங்களை சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக கடந்த 28- ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதைடுத்து, முதுகுளத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை முதுகுளத்தூா் மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், சாத்தனூா் கிராம விளைநிலத்தில் சாய்ந்திருந்த 5 மின் கம்பங்களை சீரமைத்தனா். இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை