‘தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது’ – முதல்வர் புகழஞ்சலி

தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.

அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!" – எனப் பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் 'தமிழ்நாடு' என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று!

ஐ.நா. செயலர் அவமதிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான கடிதத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை!

அந்த உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாகாணம் என்றிருந்ததை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றக் கோரி, விருதுநரில் தியாகி சங்கரலிங்கனார் 76 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிரிழந்தார்.

அதன்பின்னர், பேரறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றதும் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல்..! முதல் பார்வை போஸ்டர்!

பாபா சித்திக்கை கொன்றவர்கள் போனில் அவரது மகன் ஸீஷான் சித்திக்கின் படம்!

மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி