திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் – அமைச்சர் ரகுபதி

ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்தது. அப்படிதான் திமுக ஆட்சியும் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக நாங்கள் ராமனைப் பார்க்கிறோம். ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காவியம் ராம காவியம். சமத்துவத்தையும், சமூக நீதியும் எல்லோருக்கும் சமம் என்று போதித்தவர் ராமன்.

ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சி. 2026 சட்டப்பேரவை தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனையால் அருதி பெரும்பான்மையோடுதி.மு.க. ஆட்சி அமைக்கும். யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது என்றார்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!