திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரெயிலில் தீ விபத்து

ரெயிலில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது,

திருச்சி,

திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் பயணிகள் ரெயில் இன்று காலை 8.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டது. இந்த நிலையில் காலை 9 மணிக்கு திருவெறும்பூர் ரெயில் நிலையம் வந்த ரெயிலில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தபோது, ரெயிலின் எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது.

இதைக் கவனித்த டிரைவர் உடனடியாக ரெயிலில் இருந்து பயணிகளை இறக்கிவிட்டார். பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தை அடுத்து பயணிகள் அனைவரும் பின்னால் வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரெயிலில் பயணத்தை தொடர்ந்தனர்.

பயணிகள் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#JUSTIN || திருச்சி அடுத்த திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரயிலில் தீ விபத்து
ரயில் எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது
திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பாசஞ்சர் ரயிலில் தீ விபத்து
பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு… pic.twitter.com/KqD3Fr9tnC

— Thanthi TV (@ThanthiTV) September 7, 2024

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!