திருச்சி: ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வட்டமடிக்கும் விமானம்!

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக வானத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்து வருகிறது.

விமானம் பறக்கத் தொடங்கியவுடன் சக்கரங்களை உள் இழுக்க முடியாமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானிகள் மீண்டும் தரையிறக்கப்பட்ட முடிவு செய்தனர்.

விமானத்தில் 141 பேர் சிக்கியுள்ளதால் அவர்களை பத்திரமாக மீட்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

தரையிறக்குவதில் சிக்கல் இருப்பதால் 5.40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 8.30 க்கு ஷார்ஜா செல்ல வேண்டிய விமானம் திருச்சியில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

விமானம் தீப்பற்றுவதை தவிர்க்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 4 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் இருக்க அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள்

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!