திருச்சி சாலையில் 4 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசல்!

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(அக். 27) மிகப் பிரம்மாண்டமாக திருவிழா போல் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது.

இதையும் படிக்க:சினிமாவை உதறிவிட்டு அரசியலுக்கு வர என்ன காரணம்? -விஜய்யின் பதில்

அரசியல் களத்தில் தடம் பதிக்க வந்துள்ள தங்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் விஜய் மாநாட்டில் பங்கேற்று பேசுவதை நேரில் கண்டுகளிக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒருபுறம் திரள, ஏராளமான மக்களும் மாநாட்டுத் திடலுக்கு சென்றிருந்தனர்.

இதையும் படிக்க: நீங்கள் என்ன பாயச ஆட்சியா? – தவெக தலைவர் விஜய்

இந்த நிலையில், மாநாட்டில் உரையாற்றிய பின், மாலை 6.30 மணியளவில் மாநாட்டுத் திடலிலிருந்து விஜய் புறப்பட்டுச் செல்ல, அவரைத் தொடர்ந்து தொண்டர்களும் மக்களும் அங்கிருந்து ஒரே நேரத்தில் கிளம்பினர்.

இதன் காரணமாக, சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில், விழுப்புரம் செல்லும் வழித்தடத்திலும், திண்டிவனம் செல்லும் வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ளது. விழுப்புரம் சுங்கச்சாவடி அருகே(இரவு 11 மணி நிலவரப்படி) சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்பதை காண முடிந்தது. போக்குவரத்து சீராக அதிகாலை வரை ஆகலாம் என்றே அங்கிருப்பவர்கள் சொல்கின்றனர்.

இதையும் படிக்க: தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்

மாநாட்டிற்குச் சென்ற பலரால் விஜய்யை நேரில் பார்க்க முடியவில்லை என்பதும், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 45 நிமிடங்களுக்குள் உரையை நிறைவு செய்த விஜய்

Related posts

Chinu Kwatra’s dream to make India a developed and happy nation

Tata Soulfull Is Bringing Ancient Superfood Millets To Consumers In Modern Formats

Celebrating Diwali With Social Harmony, Innovation And Creativity