திருச்சி: மாற்று விமானத்தில் 108 பேர் ஷார்ஜா பயணம்

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக வானத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்து வந்த நிலையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து சனிக்கிழமை காலை மாற்று விமானம் மூலம் 108 பயணிகள் ஷார்ஜா புறப்பட்டனர். சிலர் தங்களது பயணத்தை தள்ளி வைத்துள்ளதாத தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை 5.40-க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறக்கத் தொடங்கியவுடன் ஹைட்ராலிக் பிரச்னையால் சக்கரங்களை உள் இழுக்க முடியாமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானத்தை தரையிறக்க முடியாமல் திருச்சி மாவட்டம் அன்ன வாசல், ராப்பூசல் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக சுமார் 4,000 அடி உயரத்தில் 25- க்கும் மேற்பட்ட முறைகள் வட்டமடித்ததால் விமானத்தில் இருந்த பயணிகள் குறித்து அச்சம் ஏற்பட்டது. விமானம் 2.30 மணி நேரத்துக்கும் மேலாக வானில் வட்டமடித்த நிலையில், விமானி மற்றும் விமானக் குழுவினரின் தொடர் முயற்சியால் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினர்.

இதையும் படிக்க |விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டதால் விமானத்தின் விமானிகள், விமானப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 150 பேரும் பத்திரமாக வெளியேறினர்.

இந்தநிலையில், அந்த விமானத்தில் ஷார்ஜா செல்விருந்த 108 பயணிகள், திருச்சியில் இருந்து மாற்று விமான மூலம் ஷார்ஜா புறப்பட்டு சென்றனர்.

ஷார்ஜா செல்ல வேண்டிய பயணிகளில் 36 பேர் தங்களது பயணத்தை தள்ளிப் போட்டுள்ளனர். மேலும் சிலர் ஷார்ஜா பயணத்தை ரத்து செய்து பயணத் தொகையை ஏர் இந்தியா நிறுவனத்திடம் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!