திருச்சி – ஹவுரா ரெயில் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்புப் பணி காரணமாக திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் ரெயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னை,

திருச்சிராப்பள்ளி- கொல்கத்தா இடையே ரயில் எண் 12664 வண்டி இயக்கப்படுகின்றது, தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருச்சியில் இருந்து மேற்குவங்க மாநிலத்தில் அமைந்துள்ள ஹவுரா என்ற நகருக்கும் 2025 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பராமரிப்புப் பணி காரணமாக திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 12, 19 மற்றும் 26ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு ரயில் புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!