திருப்பதி கோயிலில் அனுமதி மறுப்பு… அமைச்சர் சேகர்பாபு வாக்குவாதம்

திருப்பதி கோயிலில் அனுமதி மறுப்பு… அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வாக்குவாதம்! – என்ன நடந்தது?

அமைச்சர் சேகர்பாபு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழ்நாடு அறநிலையத்துறை ஆணையரை அனுமதிக்க மறுத்ததால் அமைச்சர் சேகர்பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ஆணிவாரா ஆஸ்தான விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து மங்கள பொருட்கள் சமர்ப்பணத்தின்போது 10 பேர் கோயிலுக்குள் செல்ல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுடன் வந்தவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூடுதலாக இருந்த அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

விளம்பரம்

இதையறிந்த அமைச்சர் சேகர் பாபு, இணை ஆணையர் மாரியப்பனை அனுமதித்தால்தான் கோயிலுக்குள் செல்வேன் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க:
காவிரி நதிநீர் பங்கீடு : அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி முடிவு!

இதன்பின் மாரியப்பனும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Minister Sekar Babu
,
Tirupathi

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்