திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு இடையூறு… டிடிஎஃப் வாசன் மீது வழக்கு

திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு இடையூறு… டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பாய்ந்தது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ

பக்தர்களுக்கு இடையூறு எற்படுத்தியது தொடர்பாக தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அளித்த புகாரில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது திருப்பதி திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலின் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்வர். அவ்வாறு ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம்தான், ப்ராங்க் வீடியோ எடுத்து டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

சர்ச்சைகளுக்கு பெயர்போன டிடிஎப் வாசன், அவருடைய நண்பர் அஜீஸ் உட்பட சிலர் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு வைகுண்ட மண்டபத்தில் இருந்த பக்தர்கள் எப்போது நமக்கு ஏழுமலையான வழிபட வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது தேவஸ்தான ஊழியர் போல காத்திருப்பு அறையின் பூட்டை திறந்து விடுவதுபோல டிடிஎப்பின் நண்பர் அஜீஸ் பாவலா செய்துள்ளார்.

விளம்பரம்

ஏழுமலையானை வழிபட நமக்கு நேரம் வந்துவிட்டது என்ற ஆனந்த களிப்பில் பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா!! என்று கோஷமிட்டு எழுந்தனர். ஆனால் அனைவரையும் ஏமாற்றி விட்டு சிரித்து கொண்டே டிடிஎஃப் குரூப் அங்கிருந்து ஓட, நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் அமர்ந்தனர்.

இதையும் படிங்க : தமிழ்நாடு அரசின் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட முக்கியத்துறையின் செயலாளர்கள் பணியிட மாற்றம்

இதனை வீடியோவை tirupathi Funny video என்ற பெயரில் டிடிஎஃப் வாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். திருப்பதிக்கு வரும் பக்தர்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது, அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்பது தேவஸ்தானத்தின் அடிப்படை கொள்கை.

விளம்பரம்

இந்நிலையில் சாமி தரிசனத்திற்காக மணி கணக்கில் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றி Funny video வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மற்றும் அஜீஸ் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, சாமி கும்பிடுவதற்காக காத்திருந்த பக்தர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ பற்றிய தகவலை நியூஸ் 18 தமிழ்நாடு சேனல் தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றது. மேலும் இது தொடர்பான செய்தியும், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

விளம்பரம்

அதன்பிறகு, டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. மக்களை மகிழ்விக்கவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும், இது மூலம் யாரைவது மனது புண்படும்படி நடந்திருந்தால் தன்னை மன்னித்து விடுங்கள் என வாசன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க : அமைச்சர் பிடிஆர் வீட்டின் அருகில் பயங்கரம்.. நாதக பிரமுகர் ஓட ஓட வெட்டிப் படுகொலை.. மதுரையில் பரபரப்பு

இந்நிலையில், டிடிஎஃப் வாசன் சாமி கும்பிட சென்ற நாளன்று தரிசன வரிசைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த வீடியோக்களின் அடிப்படையில் திருமலை நகர காவல் நிலையத்தில் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தனர்.

விளம்பரம்

அதன்பேரில் திருமலை போலீசார் தற்போது டிடிஎஃப் வாசன் மீது வழக்கு எண் 72/2024, செக்சன் 299 அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வாசனுக்கு திருமலை காவல் நிலைய அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் திருப்பதி மலைக்கு வந்து கொண்டிருப்பதாக திருமலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணை முடிவில் தான் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் மீது கைது நடவடிக்கை பாயுமா என்பது குறித்து தெரியவரும். ஏற்கனவே, கார் ஓட்டும் போது செல்போன் பேசியதாக கைதான வழக்கில் டி.டி.எப் வாசன் நிபந்தனை ஜாமினில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
Crime News
,
Tirupathi
,
TTF Vasan

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்