திருப்பதி கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற புது மாப்பிள்ளை உயிரிழப்பு…

திருப்பதி கோயிலுக்கு சென்ற புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் மரணம் : பாதயாத்திரையாக சென்ற போது நேர்ந்த சோகம்!

திருப்பதி திருமலை கோயிலுக்கு பாத யாத்திரையாக படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி அருகே கேசரம் கிராமத்தைச் சேர்ந்த நரேஷ், பெங்களூருவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், சுவாதி என்ற பெண்ணுக்கும் கடந்த 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக படி வழியாக பாத யாத்திரை சென்றுள்ளனர்.

2 ஆயிரத்து 350ஆவது படியில் ஏறும்போது, திடீரென நரேஷுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. புதுமணப்பெண் சுவாதி, அதிர்ச்சியில் செய்வதறியாது தவித்த நிலையில் சக பக்தர்கள் நரேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்தியாவின் மிக நீண்ட ஐடி ரெய்டு – ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு மட்டும் 10 நாட்கள்! எங்கு தெரியுமா?

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். திருமணம் ஆன 15 நாட்களில் புது மாப்பிள்ளை இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Death
,
Heart attack
,
newly married couple
,
Tirupathi

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்