திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடு செய்தால் – சந்திரபாபு எச்சரிக்கை

“திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடு செய்தால் தண்டனை உறுதி” – சந்திரபாபு நாயுடு சூளுரை!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் முறைகேடுகள் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சூளுரைத்துள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சந்திரபாபு நாயுடு திருப்பதி சென்றார்.
ஆலய நிர்வாகிகள் சந்திரபாபு நாயுடுவுக்கு வரவேற்பு அளித்தனர். குடும்பத்துடன் திருப்பதி சென்றிருந்த சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பதி மலையின் புனிதத்திற்கு கேடு நிகழ்ந்துள்ளதாகவும் நிர்வாக சீர்திருத்தத்தை திருப்பதி மலையில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வேறு எங்காவது தவறு செய்தால் அடுத்த ஜென்மத்தில் தண்டனை உறுதி என குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, ஆனால் திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடுகளில் ஈடுபடுபட்டால் இந்த ஜென்மத்திலேயே தண்டனை கிடைத்து விடும் என குறிப்பிட்டார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
N Chandrababu Naidu
,
Tirupati temple

Related posts

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு