திருப்பதி ரயில் இன்று திருத்தணியுடன் நிறுத்தம்

திருப்பதி ரயில் இன்று திருத்தணியுடன் நிறுத்தம்திருப்பதி செல்லும் மெமு ரயில் புதன்கிழமை (ஆக.7) திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.

சென்னை: திருப்பதி செல்லும் மெமு ரயில் புதன்கிழமை (ஆக.7) திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் புதன்கிழமை (ஆக.7) திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.10, 11 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் மற்றும் திருத்தணிக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் புதன்கிழமை திருவள்ளூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து காலை 11.15, பகல் 12 மணிக்கும், திருத்தணியில் இருந்து பகல் 12.35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.

வேலூா் கன்டோன்மன்டில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் புதன்கிழமை சித்தேரி வரை மட்டும் இயக்கப்படும்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்