திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணுக்கு நீதிமன்றம் சம்மன்!

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட கலப்பட நெய் பயன்படுத்தப்படுவதாகப் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய திருப்பதி லட்டு விவகாரத்தில் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துமாறுப் பேசியதாகக் கூறி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்கறிஞர் ராமா ராவ் இம்மானேனி வழக்கு தொடர்ந்துள்ளார்,

இதனைத் தொடர்ந்து, வருகிற நவம்பர் 22 அன்று நேரில் ஆஜராகுமாறு ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தெலங்கானாவில் உள்ள பல இணையதளங்கள் மற்றும், சமூக வலைதளங்களில் பவன் கல்யாண் வெளியிட்ட அறிக்கை பகிரப்பட்டதாக மனுதாரர் கூறியதால், தெலங்கானா தலைமைச் செயலர் சாந்தி குமாரிக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், பகிரப்பட்டப் பதிவுகளை தெலங்கானா அரசு நீக்கவேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிக்க | லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு! -கர்னி சேனை அறிவிப்பு

இது தொடர்பாகப் பேசிய மனுதாரரான வழக்கறிஞர் ராமா ராவ் இம்மானேனி, “நாங்கள் ஹிந்து மத நம்பிக்கைகளைக் முழுமையாகக் கடைபிடித்து வருகிறோம். பவன் கல்யான் தெலங்கானாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் அவரது இழிவுபடுத்தும் விதமான, அவதூறான பேச்சால் நாங்கள் மிகவும் புண்பட்டுள்ளோம்” என்று கூறினார்.

மேலும், “கடந்த செப்டம்பர் 20 முதல் 22 வரையிலான நாள்களில் திருப்பதி பிரசாதத்தில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலந்ததாக எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி பவன் கல்யாண் தனது வெறுப்புப் பேச்சால் குற்றம் சாட்டியிருந்தார்.

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்குப் படைக்கப்படும் பிராசாதம் மீது அவதூறு பரப்பிய பவன் கல்யாண் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு இத்தகைய சர்ச்சைக்குரியக் கருத்துக்களைத் தெரிவிக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்” என்று மனுதாரர் தெரிவித்தார்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி