திருப்பத்தூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூரில் வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற தந்தை, மகன் உட்பட 3 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற தந்தை, மகன் உட்பட 3 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த சிங்காரம் (40 வயது) என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் தனது மகன் லோகேஷ் (14 வயது) மற்றும் கரிபிரான் (60 வயது) ஆகியோருடன் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் நேற்று இரவு வனவிலங்கு வேட்டைக்காக சென்றுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி பொருத்தியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் மூவரும் வனவிலங்கு வேட்டைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து வனத்துறை மற்றும் குரிசிலாப்பட்டு போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#JUSTIN || மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்புதிருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்புபெருமாபட்டு பகுதியில் முருகன் என்பவரின் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலிவனவிலங்குகளை வேட்டையாட சென்ற மூக்கனூர்… pic.twitter.com/CLwRf20AlX

— Thanthi TV (@ThanthiTV) September 22, 2024

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்