விரதத்தின் ஒரு பகுதியாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருமலைக்குச் சென்றார்.
திருப்பதி கோயிலின் லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக தெரிக்கப்பட்டதையடுத்து, ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் 11 நாள்கள் திருமலையில் விரதம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக பவன் கல்யாண் மூன்று நாள் ஆன்மிகப் பயணமாக திருமலைக்குச் சென்றுள்ளார்.
திருமலைக்குச் சென்றடைந்த பவன் கல்யாண் அலிப்பிரி நடைப்பாதை வழியாக ஸ்ரீவாரி படிகளில் கோயிலுக்கு செல்கிறார்.
ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
இதுகுறித்து பவன் கல்யாண் கூறுகையில், “விரதமிருப்பது ஹிந்து சனாதன தர்மத்தின் பாதுகாப்பை முன்னெடுத்து செல்வதற்கானதாகும். இது மிகவும் முக்கியமானது. கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கோயிலில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து அவமதிப்புகள் நிகழ்ந்தன.
குற்றம் சாட்டப்பட்ட வழக்குகள் வேறுவழியில் விசாரிக்கப்படும். விரதம் பத்து நாள்களை எட்டியுள்ளது. விரதம் முடிந்தது குறித்து விரைவில் அறிக்கையில் தெரிவிக்கப்படும். இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அதற்கான திட்ட வழிமுறைகளை புதன்கிழமை வெளியிடுவோம்” என்றார்.
பவன் கல்யான் வருகிற வியாழக்கிழமை திருமலையில் இருந்து விஜயவாடா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.