திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: பௌா்ணமி தினத்தையொட்டி, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06130) காலை 11 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். தொடா்ந்து, விழுப்புரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 9.15 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்