திருவள்ளூரில் 21-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

திருவள்ளூரில் 21-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவள்ளூர் மத்திய மாவட்டம், மதுரவாயல் தொகுதி, மதுரவாயல் வடக்கு பகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகப் பொருளாளர் ஜாவித் அகமத் திடீரென அகால மரணமடைந்துவிட்டதால், இப்பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற 21-ம் தேதி நடைபெறும். மேலும், ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் 21-ம் தேதி நடைபெற உள்ள பிற பொதுக்கூட்டங்களை, முன்போ அல்லது பிறகோ நடத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say