திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்! 2 பெட்டிகள் தீப்பற்றின!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதியதில் 7 பெட்டிகள் தடம் புரண்டன. இரு பெட்டிகள் தீப்பற்றின. விபத்தில் சிக்கிய ரயில் பயணிகள் பலர் காயமுற்றனர். உயிரிழப்புகள் பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை.

கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) இரவு 9.30 மணியளவில் கவரப்பேட்டை அருகே விபத்தில் சிக்கியது.

வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பெரம்பூரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதியது.

இந்த விபத்தில் 7 குளிர்சாதனப் பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் சிக்கி காயம் அடைந்தனர். இதில் முன்னே இருந்த சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தீப்பற்றின.

இந்த விபத்தில் பலர் சிக்கி காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

திருவள்ளூர் ரயில் விபத்து புகைப்படங்கள்..!

இந்த விபத்தைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தலா 2 தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ரயில் விபத்தில் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதில் உருக்குலைந்தன. இவற்றில் பயணிகள் யாராவது சிக்கி உள்ளனரா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு

கவரைப்பேட்டை ரயில் விபத்தைத் தொடர்ந்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் விபத்து தொடர்பாக 044-2535 4151, 044 2435 4995 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இங்கே விடியோ இணைப்பு….

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!