திறப்பு விழாவுக்கு முன்பே திடீரென இடிந்து விழுந்த பாலம்… பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்!
திறப்பு விழாவுக்கு முன்பே திடீரென இடிந்து விழுந்த பாலம்
பீகார் மாநிலத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் சுபாலில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம், கட்டுமானப் பணியின்போதே திடீரென இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் ஒருவர் பலியானதுடன், 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பீகாரின் அராரியாவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
சிக்தி மற்றும் குர்சகந்தா தொகுதிகளை இணைக்கும் வகையில் பக்ரா நதியின் மீது ரூ.12 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது. திறப்பு விழா அறிவிக்கப்பட்டதால், பாலத்தின் கட்டுமானப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலையில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விளம்பரம்இதையும் படிங்க : தண்டவாளத்தில் படுத்திருந்த 10 சிங்கங்கள்.. ரயில் ஓட்டுநரின் சாதுர்யமான முடிவு – வைரல் வீடியோ
தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தபோதே பாலம் இடிந்து விழுந்த நிலையில், உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இந்த விபத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#JUSTIN பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது #Bihar#Bridge#News18tamilnadu | https://t.co/uk2cvptedPpic.twitter.com/NYRRzg9b7I
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 18, 2024
விளம்பரம்
திறப்பு விழாவுக்கு முன்பே பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலம் எப்படி இடிந்து விழுந்தது எனவும், தரமின்மையால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Bihar