தில்லியின் அடுத்த முதல்வர் யார்? ஆம் ஆத்மி நாளை ஆலோசனை

தில்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (செப். 17) காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இக்கூட்டத்தின் ஆலோசனையில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ள நிலையில், அடுத்த முதல்வரைத் தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு, நாளை காலை 11.30 மணியளவில் ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.

அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையின் முடிவில், அடுத்த முதல்வரின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

தில்லியில் புதிய மதுபானக் கொள்கை வழக்கில் கேஜரிவால் கடந்த மார்ச்சில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரிய கேஜரிவாலின் மனுவை செப்.13ல் விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது. இதையடுத்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மக்களை நேரடியாகச் சென்று சந்திக்கவுள்ளதாகவும், தன்னை நேர்மையானவன் என மக்கள் சான்றளித்தபின் அடுத்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், அதன்பின் மீண்டும் முதல்வர் பதவியேற்றுக் கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழாசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியமா? வெளியுறவுத் துறை விளம்பரத்தால் சர்ச்சை!

இன்னும் 2 நாள்களில் பதவி விலகவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கூடி, ஆலோசித்து புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி அரசியல் விவகாரக் குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் நாளை காலை 11.30 மணியளவில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

நாளை மாலை ஆளுநரை சந்திக்கிறார் கேஜரிவால்!

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்