தில்லியில் அதிகரிக்கும் டெங்கு: ஒரே வாரத்தில் 300 பேர் பாதிப்பு!

தில்லியில் கடந்த ஏழு நாள்களில் 300-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி(எம்சிடி) தெரிவித்துள்ளது.

தேசியத் தலைநகரில் நீரில் உருவாகும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 250 டெங்கு வழக்குகள் பதிவான நிலையில், ஒரே வாரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:நாட்டியமாடிய பத்மினி, நடிகையானது எப்படி?

மாநகராட்சியின் தரவுகளின்படி, தில்லியில் செப்டம்பர் மாதம் மட்டும் 651 டெங்கு வழக்குகளும், மொத்தம் இதுவரை 1,129 டெங்கு பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. ஒருவர் பலியாகியுள்ளனர்.

கடந்தாண்டு இதே மாதத்தில் 3,013 டெங்கு வழக்குகளும் 19 டெங்கு இறப்புகளும் பதிவான நிலையில், மொத்த பாதிப்பு 9,266 ஆகும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மலேரியா பாதிப்புகளும் இந்தாண்டு கணிசமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இதுவரை 363 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 294ஆகப் பதிவான நிலையில், மொத்த மலேரியா வழக்குகள் 426ஆகப் பதிவானது. பெரும்பாலும் மேற்கு தில்லி மண்டலத்தில் அதிகம் பதிவானது.

இதையும் படிக்க: புல்வாமா தாக்குதல் குற்றவாளி மாரடைப்பால் உயிரிழப்பு!

மேலும், 43 சிக்குன்குனியா வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. கடந்தாண்டு மொத்தம் 65 வழக்குகள் பதிவாகின. இந்தாண்டு தெற்கு தில்லியில் அதிக சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும், சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று ஆய்வுகள், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியால், இந்த ஆண்டு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைவாக உள்ளதாகக் குடிமை அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடு மற்றும் அலுவலம் என சரியான பராமரிப்பு மேற்கொள்ளாதவர்களிடமிருந்து ரூ.24.82 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிகளைப் பின்பற்றாத 9,241 பேர் மீது காவல்துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!