தில்லியில் கட்டடம் இடிந்து 12 பேர் காயம்!

தில்லியில் இரண்டு அடுக்கு கொண்ட வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.

விபத்து

தில்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு கொண்ட வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சிபெற்ற, புத்திக் கூர்மையான.. : கிளியை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.10,000 பரிசு

கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலை 9.10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் மீட்புப் பணியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போல கடந்த மாதம் தில்லியில் உள்ள மாடல் டவுனில் புனரமைப்பில் பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

ராகுலின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தில்லி முதல்வர் எக்ஸ் பதிவு

விபத்து குறித்து தில்லியின் முதல்வர் அதிஷி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அங்கு வசிக்கும் மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக மாநகராட்சி மேயரிடம் பேசினேன். இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. தில்லி மக்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், வீட்டு கட்டுமானத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தால், உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். மாநகராட்சி மற்றும் அரசு உடனடியாக உங்களுக்கு உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் வெறியாட்டம்! பேஜர்கள் வெடித்த விவகாரத்தில் லெபனான் குற்றச்சாட்டு

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்