தில்லியில் சட்டம் ஒழுங்கை கையாள பாஜகவால் இயலவில்லை: ஆம் ஆத்மி

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாகச் சாடியது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் கூறியது,

மக்களைக் குறிவைத்து தீவிரவாத கும்பல்கள் ஈடுபட்டு வருவதாகவும், தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசலால் எதுவும் செய்ய இயலவில்லை.

சட்டம் ஒழுங்கை மேம்படுத்தக் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை பாஜக சமர்ப்பிக்க வேண்டும். தில்லியில் சட்டம் ஒழுங்கைக் கையாளும் திறன் பாஜகவிடம் இல்லை என்றால், நாட்டின் எல்லைகளை எவ்வாறு பாதுகாக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், ஜம்மு காஷ்மீரில் நிலைமையைக் கையாள மத்திய அரசால் முடியவில்லை.

பாஜக தலைமையிலான மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்தது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள், தில்லியில் தான் சட்டம் ஒழுங்கை கையாள முடியவில்லை என்றால் காஷ்மீரிலும் அதே நிலைதான்.

மேலும், தில்லியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை எழுப்பிய அவர், நகரத்தில் உள்ள வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலிலிருந்து நிவாரணம் வழங்க மத்திய அரசு இதுவரை எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Related posts

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்