தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் கைது!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லியில் உள்ள அமானத்துல்லா கான் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்திய நிலையில், தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தில்லி வக்ஃப் வாரியத் தலைவராக அமானத்துல்லா கான் இருந்தபோது, பணி நியமனத்திற்காகப் பணம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

புதிய சாதனை படைத்த சென்னை மெட்ரோ ரயில்!

अभी सुबह-सुबह तानाशाह के इशारे पर उनकी कटपुतली ED मेरे घर पर पहुँच चुकी है, मुझे और AAP नेताओं को परेशान करने में तानाशाह कोई कसर नहीं छोड़ रहा।
ईमानदारी से अवाम की ख़िदमत करना गुनाह है?
आख़िर ये तानाशाही कब तक?#EDRaid#Okhlapic.twitter.com/iR2YN7Z9NL

— Amanatullah Khan AAP (@KhanAmanatullah) September 2, 2024

முன்னதாக அமானத்துல்லா கான் வெளியிட்ட விடியோவில், "தன்னை கைதுசெய்து துன்புறுத்துவதே அமலாக்கத்துறை அதிகாரிகள் நோக்கம். சர்வாதிகாரியின் கட்டளையின் பேரில் என்னை கைது செய்ய வந்துவிட்டனர்” என்று தெரிவித்து இருந்தார்.

மேலும், அவர் தான் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும், நீதிமன்றம் தனக்கான வழங்கும் என்றும் அமானத்துல்லா கான் தெரிவித்து இருந்தார்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!