அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று(செப். 16) தில்லி திரும்பினார்.
காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக(செப். 8 -11) கடந்த செப். 6 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டார்.
டெக்சாஸ் சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பேசிய அவர் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார்.
முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு!
மாணவர்களுடன் உரையாடல், இந்திய மக்கள் மத்தியில் பேசியது, செய்தியாளர்களைச் சந்திப்பது என பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இந்தியாவில் உள்ள அரசியல் சூழல், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள், ஒற்றுமை நடைப்பயணம் உள்ளிட்ட கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்பு மேற்கொண்டார்.
இதையடுத்து 10 நாள்களுக்குப் பிறகு அவர் இன்று காலை தில்லி திரும்பினார்.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியாணாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.