தில்லி முதல்வராகிறார் அதிஷி!

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தில்லியின் அடுத்த முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. எனினும் அவர் முதல்வர் அலுவலகத்துக்குச் செல்லக் கூடாது, எந்த கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, திகாா் சிறையிலிருந்து வெளியே வந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால், 48 மணி நேரத்திற்குள் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

ஆளுநர் வி.கே. சக்சேனாவை இன்று மாலை 4.30 மணியளவில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்குகிறார் கேஜரிவால்.

கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

அதற்கு முன்னதாக தில்லியின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும்பொருட்டு கட்சியின் மூத்த தலைவர்களுடன் கேஜரிவால் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

கேஜரிவால் மனைவி சுனிதா, அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய், கைலாஷ் கலோத் ஆகியோரின் பெயர்கள் அடுத்த முதல்வருக்கானத் தேர்வுப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) காலை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

யார் இந்த அதிஷி?

கூட்டத்தில் கேஜரிவால், முதல்வர் பதவிக்கு அதிஷியின் பெயரை முன்மொழிந்ததாக தகவல் வெளியானது.

அதன்படி தில்லியின் அடுத்த முதல்வராக அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வரை அவர் முதல்வர் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி, கேஜரிவால் சிறையில் இருந்தபோது பணிகளை திறம்பட கவனித்ததுடன் செய்தியாளர்களையும் அவ்வப்போது சந்தித்துப் பேசினார்.

தில்லி சட்டப்பேரவைக்கு 2025 தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்