தில்லி: விமான நிலையத்தில் ஹாங்காங் பெண்ணிடம் இருந்து 26 ஐபோன்கள் பறிமுதல்

தில்லி விமானநிலையத்தில் வெளிநாட்டு பயணியிடம் இருந்து 26 ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஹாங்காங்கைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து, 26 ஐபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையில் (அக். 1) பறிமுதல் செய்துள்ளனர். சுமார் 30 வயதுடைய அந்த பெண்ணிடம் சோதனை மேற்கொண்டபோது, அவர் கொண்டு வந்த பையில் 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போன்கள் ஒளித்து வைத்திருந்தார்.

இந்திய மதிப்பில், அதன் மதிப்பு சுமார் ரூ. 37 லட்சம் வரையில் இருக்கும். அந்த பெண் கைது செய்யப்படவில்லை என்றாலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சாட்சி சொன்ன மகள்! தாயை 22 முறை குத்திக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!!

இந்த சம்பவத்தில், உயர்நிலை மின்னணு பொருள்களைக் கடத்தும் கும்பல் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.

கூடுதலாக, தில்லியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் சோதனைகளுக்கு மத்தியில், தெற்கு தில்லியில் இன்று (அக். 2) ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!