‘தி பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ நடிகர் ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ரோம் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

ரோம்,

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான உலகப்புகழ் பெற்ற 'தி பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்'' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகினர். இதுவரை இதன் 5 தொடர்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் இவர் 'மோடி-திரீ டெய்ஸ் ஆன் தி வின்னிங் மேட்னஸ்' என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில், பிரெஞ்சு நடிகர் அன்டோனியா டெஸ்ப்லாட் மற்றும் ரிக்கார்டோ ஸ்காமர்சியோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியில் அடுத்த மாதம் ரோம் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

அடுத்த மாதம் 16 முதல் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில், ஜானி தீப் இயக்கிய 'மோடி-திரீ டெய்ஸ் ஆன் தி வின்னிங் மேட்னஸ்' படமும் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Original Article

Related posts

‘தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’: நடிக்க மறுத்த தீபிகா படுகோன் – காரணம் என்ன தெரியுமா?

பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

‘தி காஞ்சுரிங் 4’: பேட்ரிக் வில்சன், வேரா பார்மிகாவுடன் இணைந்த பிரபலங்கள்?